44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களும் 02 அன்னாசிப்பழ வகைகளும் இனங்காணப்பட்டுள்ளன

குளியாப்பிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தினால் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களும், 02 அன்னாசிப்பழ வகைகளும் இனங்காணப்பட்டுள்ளன.

அந்தூரியம் பயிர்ச்செய்கை சுயதொழிலாக ஊக்குவிக்கப்பட்டுள்ளதால், அந்த ரகங்கள் விரைவில் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 44 அந்தூரியம் இனங்களுக்கு மேலதிகமாக,  லங்கா பியூட்டி மற்றும் லங்கா குமாரி என பெயரிடப்பட்ட 02 புதிய அந்தூரியம் இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை, இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இலகுவாக பயிரிடக்கூடிய 02 புதிய முள் இல்லாத அன்னாசி வகைகளையும் மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.