தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை
தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தையை பெற்றெடுக்க வற்புறுத்திய தந்தைக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றவாளி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 13 வயதாக இருந்தபோது சிறுமியின் தாய் வேலைக்காக குவைத் நாட்டிற்கு சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, குறித்த சிறுமி கூலித் தொழிலாளியான தனது தந்தை மற்றும் தனது இரண்டு சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் குறித்த நபர் தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.