கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்த மரத்தை அகற்றிய படையினர்

 

-யாழ் நிருபர்-

மண்டூஸ் சூறாவளியினால் கட்டடத்தின் மீது முறிந்து விழுந்த மரத்தினை இராணுவத்தின் 511 படைப்பிரிவினர் அகற்றி உதவியுள்ளனர்.

மண்டூஸ் சூறாவளியினால் யாழ். காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனத்தின் வளாகத்தில் நின்ற மரம் முறிந்து கட்டடத்தின் மீது சாய்ந்தது.

இந்நிலையில் குறித்த மரத்தினை அகற்றுவதற்கு இராணுவத்தினர் முன் நின்று செயற்பட்டமை குறி;பிடத்தக்கது.