மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க குழந்தைக்கு விஷம் கொடுத்த கணவன்

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் தனது 12 வயது குழந்தைக்கு தந்தை ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் பொலன்னறுவை – பகமூன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

48 வயதுடைய குறித்த தந்தை நேற்று புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குழந்தை பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய குழந்தையின் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.