பிறப்பு சான்றிதழ் இல்லாததால் திருமணத்திற்கு தடை : இளம் காதலர்கள் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு
தங்காலை – மெடகட்டிய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என தெரியவந்துள்ளது.
குறித்த விடுதியின் அறையொன்றில் நேற்று திங்கட்கிழமை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், தங்காலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும், அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் அதே விடுதியில் பணிபுரிந்து வருவதுடன், நேற்று இரவு குறித்த யுவதியுடன் விடுதிக்கு வந்து குறித்த அறையில் தங்கியுள்ளார்.
இருவரும் காதலர்கள் எனவும், இருவரும் இறப்பதற்கு முன் எழுதிய கடிதமும் அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் திருமணத்திற்கு தடைகள் ஏற்பட்டதாகக் கூறி இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.