பாட்டனாரையும் பேரனையும் கடத்திய பெண் சிறைச்சாலையில் உயிரிழப்பு
நீர்கொழும்பில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் ஆண் ஒருவரும் அவரது பேரனும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய நபரையும் அவரது 10 வயது பேரனையும் கடத்திச் சென்ற 47 வயதுடைய பெண் கடந்த வாரம் கிராண்ட்பாஸில் கைது செய்யப்பட்டார்.
தனது வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய போதைப்பொருளிற்கு பணம் கொடுக்காததால் குறித்த வாடிக்கையாளரின் தந்தை மற்றும் மருமகனை கடத்திச் சென்ற பெண், மீதித் தொகைக்கு ஈடாக குழந்தையை பிணைக் கைதியாக வைத்து கொண்டு வாடிக்கையாளரின் தந்தையை விடுவித்திருந்தார்
எவ்வாறாயினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குழந்தையை மீட்டு, பெண்ணை அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர், பின்னர் அவர் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
திடீர் சுகவீனம் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை கொழும்பு மேலதிக நீதவான் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெல்லம்பிட்டிய சேடவத்தையில் வசிக்கும் 47 வயதுடைய பெண்ணே .வ்வாறு உயிரிழந்தவராவார்