துப்பாக்கிசூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
எம்பிலிபிட்டிய – பனமுர – ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை காலை குறித்த நபர் தனது குழந்தையை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி விட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.
வீதியில் மறைந்திருந்து சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.