கிளிநொச்சியில் 6 பேர் கொண்ட குழுவால் பெண் ஒருவர் கடத்தல்
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
உதயநகர் பகுதியில் வசிக்கும் குறித்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், குறித்த காதலன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த காதலன், போதை தலைக்கேறிய நிலையில் குறித்த யுவதியின் வீட்டுக்குள் புகுந்து தாய் மற்றும் தம்பியை தாக்கிவிட்டு யுவதியை மூச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளார்
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.