Last updated on January 4th, 2023 at 06:53 am

இரும்புக் கம்பியால் தாக்கி கொலை

இரும்புக் கம்பியால் தாக்கி கொலை

நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாம்புரி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபரும் மற்றுமொரு நபரும் மதுபோதையில் இருந்ததாகவும், செபஸ்டியன் முனி மாவத்தையில் உள்ள குறுக்கு வீதியொன்றுக்கு அருகில் வைத்து இரும்பு கம்பியால்  தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலை தொடர்பாக செபஸ்டியன் முனி மாவத்தையைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.