Last updated on January 4th, 2023 at 06:54 am

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டது

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டது

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த டிசம்பர் 21 ம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயதுச் சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது.

வீதியில் பந்தய ஓட்டம் ஓடிய இ.போ.ச சாரதியால் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து கடந்த 21 ம் திகதி மாலை விபத்துக்குள்ளானது .

இந்த விபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச ஊழியரான யாழ். சாவகச்சேரி – அரசடியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி (வயது 32) என்பவர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயமடைந்தனர்.

அதில் காயமடைந்த முள்ளிவாய்க்காலை சொந்த இடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ரொட்மன் ரொணிக் ரொபின் (வயது 6) என்ற சிறுவனின் இரு கைகளும் காயமடைந்த நிலையில் ஒரு கை அகற்றப்பட்டிருக்கின்றது.