திருடப்பட்ட மின்விளக்கின் பாகம் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் – வல்லை பகுதியில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோளர் மின் விளக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தது.
அந்தவகையில் மின் விளக்குகளின் சில பாகங்கள் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபையினால் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நன்மை கருதி பொருத்தப்பட்ட மின் விளக்குகளை, பொதுமக்களே பாதுகாக்க தவறுகிறார்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ் கவலை வெளியிட்டுள்ளார்.