பொருளாதார நெருக்கடியால் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக்கிளை வியாபாரம்

-யாழ் நிருபர்-

யாழ். நாகர்கோவில் மற்றும் மணல் காடு ஆகிய பகுதிகளில் சவுக்கு மரக்கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வீடுகள் மற்றும் பொது இடங்களை அலங்கரிப்பதற்கு இந்த சவுக்கு மரக்கிளைகளை மக்கள் கொள்வனவு செய்து சென்றதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக இந்த சவுக்கு மரக்கிளைகள் யாழ். மரியன்னை தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதிகளிலும், புனித பற்றிக்ஸ் கல்லூரி அருகாமையிலும் வெகுவாக விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது வியாபாரிகள் சவுக்கு மரக்கிளைகளை 500 தொடக்கம் 800 ரூபா வரை விற்பனை செய்கின்றனர்.