வைரலாகும் இம்ரான் கானின் பாலியல் அரட்டைகள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாலியல் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கான் இரண்டு பெண்களுடன் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாலியல் உரையாடல் அடங்கிய குரல்பதிவுகள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
எனினும், குறித்த குரல் பதிவுகள் போலியானவை என்றும், இது இம்ரான் கானின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கான மற்றொரு முயற்சி என்றும் அவரது கட்சி தெரிவித்துள்ளது.
இந்த குரல் பதிவுகளை பாகிஸ்தானிய ஊடகவியலாளர் சையத் அலி ஹைதர் தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளதுடன், அந்த குரல் பதிவுகள் இன்னும் அந்த யூடியூப் தளத்தில் உள்ளன.
இம்ரான் கானைப் போல ஆள்மாறாட்டம் செய்ய பலர் உள்ளனர். இது அவர்களில் ஒருவராக இருக்கலாம். எனினும், அதற்கு எந்தவித தடயவியல் ஆதாரங்களும் இல்லை. குரல் பதிவுகளில் ஒன்று பழையது. 2008-09 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியதாக இருக்கலாம். இந்த பதிவில் முஷாரஃப் போன்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
மற்றைய குரல் பதிவு சமீபத்தியது என்று நம்பப்படுகிறது. அதில் அநேமதேய பெண் ஒருவர் தமது உடல் உறுப்புகளில் ஏற்பட்ட வலிகள் குறித்து குறிப்பிடப்படுவதாக சையத் அலி ஹைதர் தெரிவித்துள்ளார்.
பாலியல் அரட்டை குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளதனால் அவரது இஸ்லாமிய விழுமியங்களை பலர் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
எவ்வாறாயினும், பல சமூக ஊடக பயனர்கள், இந்த குரல் பதிவு முற்றிலும் போலியானது என்றும் பல செயலிகளால் அத்தகைய குரல்களை உருவாக்க முடியும் என்று தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.