
தனியார் காணியொன்றிலிருந்து இரண்டு ஆர் பி ஜி செல்கள் மீட்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து இரண்டு ஆர் பி ஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர் இன்று செவ்வாய்க்கிழமை தனது காணியினை துப்புரவு செய்யும் போது, இரண்டு ஆர் பி ஜி செல்கள் இருப்பதனை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார், இரண்டு செல்களையும் பார்வையிட்டதுடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் இரண்டு செல்களையும் செயலிழக்க செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
