மயக்க மருந்து கொடுத்து சிறுவனை துஸ்பிரயோகம் செய்த ஓய்வு பெற்ற கடற்படை வீரர்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை வீரரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பத்தாம் கட்டை -கிதுல்ஊத்துவ பகுதியில் வசித்து வரும் துசித ரத்ன வீரர் (46 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள குறித்த சிறுவனுடன் நட்பாக பழகி வந்த குறித்த கடற்படை வீரர், சிறுவன் தனிமையில் இருந்த சமயம்,  சிறுவனுக்கு மயக்க மாத்திரையை கொடுத்து, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளை,  சிறுவனை துஸ்பிரயோகம் செய்ததாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சந்தேக நபரான முன்னாள் ஓய்வு பெற்ற கடற்படை வீரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மொரவெல பொலிஸார் மேற்;கொண்டு வருகின்றனர்.