காப்புறுதி நிறுவனப் பணிப்பாளரின் மரணத்தின் பின்னணி

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கிரிக்கெட் வர்ணனையாளர் தொழிலதிபர் தினேஸ் சாப்டரிடம் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்ணனையாளர் தினேஷ் ஷாப்டரிடம் 138 கோடி ரூபா வரை கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை மீள செலுத்த முடியாமல்பொரளை மயானத்தில் வைத்து தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இந்த கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று தினேஷ் ஷாப்டர் தனக்கு பாரிய தொகை பாக்கி வைத்துள்ள நபரை சந்திக்க செல்வதாக தனது மனைவிக்கு தெரிவித்துவிட்டு கொழும்பு 07 இல் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்தி 

பொரளை மயானத்தில் காருக்குள் கட்டப்பட்டு : மீட்கப்பட்ட தொழிலதிபர் உயிரிழப்பு