தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடம்

 

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கையின் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக முதலிடத்தை பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  பெற்றுக்கொண்டார்.