
ஆற்றில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மெனிண்டி அருகே உள்ள டார்லிங் நதியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளன.
செத்த மீன்கள் ஆற்றில் மிதப்பதாகவும், கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளம் மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக இந்த மீன்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் மூன்றாவது நீளமான நதியான இங்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
