
தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணாதாச கொடிதுவாக்கு ஆகியோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி தகவல் அறியும் உரிமையின் கீழ் இவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் உரிய தகவல்களைக் கோரியதோடு, அதற்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் 01இன் படி ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.












