
இருவரால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை
திவுலப்பிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரால் தாக்கப்பட்டதில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் குழுவுடன் உரையாடி விட்டு வீடு திரும்பும் போது குறித்த நபர் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்நேரம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கூரிய ஆயுதங்கள் மற்றும் இரும்பு கம்பியினால் அவரைத் தாக்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து காயங்களுக்குள்ளான நபர் மீட்கப்பட்டு மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய திவுலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
