
கோவிலில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது தாக்குதல்
-யாழ் நிருபர்-
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவிலிலுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குபேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த தாக்குதலில் கார் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
