பேருந்தை செலுத்திக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த சாரதி
ஹிகுராக்கொட – மின்னேரிய பகுதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை குறித்த சாரதி தனது பேருந்தை ஓட்டும் போது மாரடைப்பு ஏற்பட்டது.
மாரடைப்பு காரணமாக ஓட்டுநர் இருக்கையில் இருந்தவாறே ஓட்டுநர் உயிரிழந்தார்இ அதேவேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி அருகில் இருந்த கடையின் மீது மோதி நின்றுள்ளது.
அதை அவதானித்த பிரதேசவாசிகள் சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடையின் மீது மோதியது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.