களைகட்டும் காதலர்தின கொண்டாட்டங்கள்

-யாழ் நிருபர்-

 

இருமனங்களின் அன்பை பரிமாறிக்கொண்டு காதல் சுவாசத்திற்கு புத்துயிர் ஊட்டுகின்ற காதலர் தினத்தின் நாளை செவ்வாய்க்கிழமை காதலர் தினத்தினை முன்னிட்டு இன்று யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காதலர் தினத்திற்கான பொருட்களை காதலர்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர்

யாழ். மாநகர கட்டிட பகுதிகளிலும் மற்றும் கடைத்தெருகளிலும் காதலர்கள் வாழ்த்து மட்டைகள், ரோஸ் மலர்க்கொத்து, வண்ண பொம்மைகள் என்னும் பொருட்களை கொள்வனவு செய்வதை காணமுடிகின்றது.

தற்போதைய விலை உயர்வுக்கான பொருட்களின் படி கணிசமான அளவு பெற்றுவருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமைகாரணமாக காதலர்கள் காதலர்தினத்தினை கொண்டாடமுடியாத நிலைகாணப்பட்டது.

ஆனால் இவ்வாண்டு சிறப்பாக இருப்பதாக பொட்களை கொள்வனவு செய்யும் காதலர்கள் தெரிவிக்கின்றனர்.