நான்கரை இலட்சம் பெறுமதியான சிவன் சிலையை திருடிய இளைஞர் கைது

முல்லேரியா பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றில் இருந்து நான்கரை இலட்சம் பெறுமதியான பித்தளையால் செய்யப்பட்ட சிவன் சிலையை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிலையை திருடியதாகவும், நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்ய செல்லும் போது களனி ஆற்றில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்றதாகவும், பின்னர் கரைக்கு திரும்பிய போது சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மீது சொத்து திருட்டு தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது எனவும், மேலும் அவர் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.