மட்டக்களப்பு : இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட ரீதியான தெரிவுப் போட்டிகள் அண்மையில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இப் போட்டிகள் 8,10,12,14 வயதுக்கு குறைவான வயதுப் பிரிவுகளில் ஆண்/பெண் பிரிவுகளாக நடைபெற்றது.

இப் போட்டிகளில் 180 போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன் 49 போட்டியாளர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் தகுதியினைப் பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது