இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை

-யாழ் நிருபர்-

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைக் கடலில் இறந்த நிலையில் பெரிய ஆமை ஒன்று நேற்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

பொன்னாலை பாலத்திற்கு அருகில் இவ்வாறு ஆமை கரை ஒதுங்கியுள்ளது.

சீரற்ற காலநிலையினால் ஆமை இறந்து கரை ஒதுங்கி இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.