தடை செய்யப்பட்ட அமைப்பை மீளுருவாக்க :ஆயுத விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய நிதி திரட்டுவதற்காக, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கையர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தெரிவித்துள்ளது.

www.indiatvnews.com இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, கைது செய்யப்பட்டவர்களில் குணா என்கிற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா ஆகியோர் அடங்குவர்.

அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தரான ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணசேகரன் மற்றும் புஷ்பராஜா ஆகியோரைத் தவிர, மொஹமட் அஸ்மின், அழகப்பெருமக சுனில் காமினி பொன்சியா கோட்டகாமினி எனப்படும் சுனில் காமினி என்ற நீலகண்டன், ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக்க ரொஷான், பிரபாணலி சுரங்கலி சுரங்கலி சுரங்கலி சுரங்கேலி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகள் தங்கியிருந்த திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்ததாக NIA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், சலீமுடன் இணைந்து குணசேகரன் மற்றும் புஷ்பராஜா ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இது இந்தியாவிலும் இலங்கையிலும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும், இலங்கையிலும் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்காக அவர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வியாபாரம் செய்து வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.