Last updated on January 4th, 2023 at 06:52 am

நாய்கள் உண்ட நிலையில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்பு

நாய்கள் உண்ட நிலையில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உடன் பிறந்த சிசு ஒன்றின் உடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மிருதங்கேணி பொலிஸாரால் தற்போது தீவிர விசாரணைகள் முடக்கி விடப்பட்டுபட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்று சடலம் நாய்கள் உண்ட நிலையில் அதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்திருக்கின்றனர்.

இந் நிலையில் குறித்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறித்த சிசுவை புதைத்தவர் அல்லது கொலை செய்தவர் என்று சந்தேகிக்கும் நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மிருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க