வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு
-யாழ் நிருபர்-
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் ஒருவன் இன்று புதன்கிழமை ஊர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாவகச்சேரி வடக்கு, மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.
அதன்பின்னர் திருடனை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.