தொடர் பனிமூட்டம் : வாகன போக்குவரத்தில் சிரமம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.
இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
என்றும் இல்லாதவாறு இம்மாதம் வானிலையில் மாற்றங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.