பொம்மைக்குள் போதை மாத்திரைகள் : இலங்கைக்கு கடத்தல்
பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தபால் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஏழு பொதிகளில் பொம்மைகள் மற்றும் உணவுகள் அடங்கிய ரின்களில் சூட்சுமமாக மறைத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருள் கையிருப்பில் 4673 கிராம் குஷ் மற்றும் 9,586 மாத்திரைகள் (4009 கிராம்) குறித்த மருந்துகளின் சந்தைப் பெறுமதி 70,095,000 ரூபா எனவும் மொத்த போதைப்பொருள் கையிருப்பு 95,860,000 ரூபா எனவும் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட சுங்க விசாரணையின் முடிவில் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.