
ரயில் கட்டணங்கள் குறைகிறதா?
ரயில் கட்டணத்தை குறைக்க முடியுமா? என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் நேற்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு விபரம்
ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டு, 340 ரூபா
ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 375 ரூபா
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 80 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 325 ரூபா
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 465 ரூபா
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 295 ரூபா
