ரயில் மோதி இருவர் உயிரிழப்பு
தெஹிவளை புகையிரத நிலையத்தில், புகையிரத பாதையை கடக்க முற்பட்ட இளைஞனும் யுவதியும் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞனும் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இவர்கள் மோதியுள்ளதுடன், குறித்த இளைஞனும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொடையை சேர்ந்த, தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மூவரும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.