சுவிட்சர்லாந்தில் சமூகவலைத்தள காதலியை சந்திக்க காத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!
சுவிட்சர்லாந்தில் யுவதி ஒருவரை சந்திப்பதற்காக பூங்காவில் காத்திருந்த 23 வயது இளைஞரை தாக்கிய இனந்தெரியாத நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வடக்கு சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zürich) மாகாணத்தில் உள்ள வின்டர்தூர் (Winterthur) என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞருக்கு ஸ்னாப்சட்டில் (snapchat) ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் நேரில் சந்திப்பதாக முடிவெடுத்துள்ளனர்
அதன்படி ஸ்னாப்சட்டில் தன்னுடன் பேசிய பெண்ணை சந்திப்பதற்காக குறித்த இளைஞன் பூங்காவில் காத்திருந்தார்
அவ்வேளையில் திடீரென அங்கு வந்த ஒரு குழுவினர் குறித்த இளைஞன் மீது மிளகுதூள் தூவி விட்டு இளைஞனை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணமும் தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பதும் தெரியாத நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களை வின்டர்தூர் பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்