
மீண்டும் இலங்கையில் வெளிநாட்டவர்களின் திருமணம்
களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி பிரித்தானிய தம்பதியர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றின் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் வெளிநாட்டு திருமணம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும், 53 வயதான நிக்கி ஜென் என்பவருக்கும் குறித்த திருமணம் நடந்தது.
மலையக நடனக் கலைஞர்களுடன், கந்த விகாரையின் குமாரி ஹஸ்தியா முன்றலில் சிங்கள சம்பிரதாயப்படி, ஜெயமங்கல பாடிக்கொண்டே தெப்பச் சடங்குகளை செய்து திருமணம் இடம்பெற்றுள்ளது.
இத்திருமண விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
