
முதலை அச்சத்தால் சுற்றுலாப் பயணிகளின் வரவில் வீழ்ச்சி
மிரிஸ்ஸ கடற்கரையை அண்மித்த பகுதிகளில் முதலையால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் பண்டிகைக் காலம் காரணமாக மிரிஸ்ஸ கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலை அச்சம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
