இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறை பிரதானி கொல்லப்பட்டார்!

ஈரான் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறை பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

“அமெரிக்க-சியோனிச எதிரி” நடத்திய “பயங்கரவாதத் தாக்குதலில்” தனது உளவுத்துறை பிரதானி கொல்லப்பட்டதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர்நிறுத்தத்திற்கான அமைதித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

உளவுத்துறை பிரதானி மஜித் கஹதெமியை இலக்காகக் கொண்ட இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.