இந்த வருடத்தில் 144,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்!

2025 ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 144,379 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

அவர்களில் 88,684 பேர் ஆண் தொழிலாளர்கள் எனவும், பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களே அதிகமாக வேலைக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக, தெரிய வருகின்றது.

இவ்வாறு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை உள்வாங்கிய நாடுகளில், குவைத் 38,806 இலங்கையர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 28,973 இலங்கை தொழிலாளர்களையும் மற்றும் கட்டார் 21,958 இலங்கை தொழிலாளர்களையும் உள்வாங்கியுள்ளன.

கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இலங்கையர்கள் குடிபெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்து வருவதையும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஜப்பான் 6,073 இலங்கையர்களையும், தென் கொரியா 3,134 இலங்கையர்களையும் தமது நாட்டுக்குள் தொழில் புரிய அனுமதித்துள்ளது.