மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு
மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றம் ஆதரிக்கும் வரை மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.
இந்த வழக்கு நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ச்சியான விநியோகம் தொடர்பில் ஆணைக்குழுவில் சமர்பித்த தீர்வை நிறைவேற்றத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.