
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆவுஸ்திரேலிய டொலர் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
இருப்பினும், கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மாறாமல், விற்பனை விலை 371.71 ரூபாயாக உள்ளது.

