இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.84 முதல் 315.70 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 332.87 முதல் 333.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பும் சற்று குறைந்துள்ளது, எனினும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.