
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 329.02 மற்றும் விற்பனை விலை ரூ. 346.33 ஆக பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியா டொலர் 231.17 ரூபாவாகவும், கனடா டொலர் 253.49 ரூபாவாகவும் மற்றும் சிங்கப்பூர் டொலர் 257.54 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, யூரோவின் விற்பனை விலை ரூ. 368.38 மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ரூ. 346.33 ஆக பதிவாகியுள்ளது.

