தஜிகிஸ்தான் – சீனா எல்லையில் நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் மேற்கு சீன எல்லைக்கு அருகில் சுமார் 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி சீன அரசு தொலைக்காட்சியான சிசிடீவி இதனை தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை 8:37 க்கு (0037 GMT) 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் காஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் வலுவாக உணரப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
எனினும், இதுவரை எந்த உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்படவில்லை என்று உள்ளூர் தகவல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்க 6.8 மெக்னிடியூட் அளிவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.