
கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் மழை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
