கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த மழை

நாட்டின் தென்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.