
மழையுடனான வானிலையில் அதிகரிப்பு
நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மீற்றருக்கு மேல் பலத்த மழையும் பெய்யலாம்.
