
நாட்டின் சில இடங்களில் மழையுடனான வானிலை
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
