12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறிய தந்தை

-திருகோணமலை நிருபர்-

12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறிய தந்தையை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹொரவ்பொத்தான- ஒலுகஸ்கட பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய ஆராய்ச்சிலாகே சமன் ஸ்ரீ (45வயது) எனவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது -திருகோணமலை -மஹதிவுல்வெவ, திம்பிரிவெவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தாயாருடன் சிறிய தந்தையின் வீட்டுக்கு கடந்த வருடன் செப்டம்பர் மாதமளவில் சென்றுள்ளார்.

வயிற்று வலி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை செய்த போது சிறிய தந்தையினால் கற்பழிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதே நேரம் சிறுமியை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்