ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர்மாற்றத்திற்கு கண்டனம்

 

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர்மாற்ற செயற்பாட்டுக்கு ஏறாவூர்பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் கண்டன அறிக்கை ஒன்று ஏறாவூர் நகர் பிரதேசசெயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

இதன் போது ஏறாவூரில் உள்ள பல நிறுவனங்களும் ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டதுடன் இவ் அமைப்பின் தலைவர் முகைதீனால் குறித்த கண்டன அறிக்கை உதவிப் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது

இக்கண்டன அறிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுனரின் கடிதத்தின்படி புன்னைக்குடா வீதியின் பெயரை ‘“EImis Walgama Road” என பெயர் மாற்றவிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். ஊரிலிருக்கின்ற அனைத்து நிறுவனங்களும்இ ஊர் மக்களும் இவ்விடயம் அறிந்து மிகவும் கவலையடைகின்றார்கள்.

ஏறாவூரின் அடையாளமாகக் காணப்படுகின்ற இவ்வீதியானது புன்னைக்குடா வீதி என்றே எல்லோராலும் அறியப்பட்ட புன்னைக்குடா கடற்கரைக்கு செல்லும் வீதியாகும்.

மூன்று இன மக்களும் இவ்வீதியில் வசித்து வருகின்றனர்.ஊரில் உள்ள நிறுவனங்களினதும், வியாபார நிலையங்களினதும் முகவரியாகக்கூட இவ்வீதி காணப்படுகின்றது.

நீண்டகாலமாக புன்னைக்குடா வீதியென்று அழைக்கப்பட்ட இதன் பெயரை “EImis Walgama Road”’ என பெயர்மாற்றம் செய்வதனை நாங்கள் ஊரிலுள்ள அனைத்து நிறுவனங்களினதும் சார்பாக மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.