
தாயை காப்பாற்ற தந்தையை கொலை செய்த மகன்
தாயை காப்பாற்ற தந்தையை கொலை செய்த மகன்
மகன் ஒருவர் தன் தாயை காப்பாற்றுவதற்காக தந்தையை தாக்கியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ம் திகதி இரவு, குறித்த நபர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராரில் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்க முயன்றார்.தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முட்பட்ட போது மகன் இரும்பு கம்பியை பிடித்து தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் நேற்று புதன் கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொலையை செய்த 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
